புதுச்சேரி அரசு நிறவனமான பாப்ஸ்கோ நிறுவனத்திற்கு கீழ் அரசு பெட்ரோல் பங்க், ரேஷன் கடைகள், மதுபானக்கடைகள், காய்கறிக்கடைகள் இயங்கிவருகின்றன. இந்நிறுவனத்தில் சுமார் 900 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், தினக்கூலி ஊழியர்களாக உள்ள 600 பேருக்கு அரசு கடந்த பத்து மாதங்களாக ஊதியம் வழங்காமல் இருந்துள்ளது.
அரசின் இந்தச் செயலைக் கண்டித்தும், தங்களக்கு ஊதியம் வழங்கக் கோரியும் பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த பட்ஜெட்டில் பாப்ஸ்கோ நிறுவனத்தை திறம்பட நடத்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.