தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மழையின் காரணமாக புதுச்சேரியில் வாக்குப்பதிவு மந்தம்! - காமராஜ் நகர் வாக்குப்பதிவு குறைவு

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கினாலும், மழையின் காரணமாக வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.

pudhucherry kamaraj nagar by election poll

By

Published : Oct 21, 2019, 10:18 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணியளவில் தொடங்கியது. இந்த தொகுதியில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 35ஆயிரத்து ஒன்பது வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட ஏழு வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 200 அரசுப் பணியாளர்கள், ஒன்பது பறக்கும் படைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வரிசையில் நின்று வாக்களித்த காமராஜ் நகர் தொகுதி வாக்களார்கள்

மேலும், பாதுகாப்பிற்காக ஒரு கம்பெனி (80 முதல் 100 வீரர்களை கொண்ட குழு) துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் இருந்து புதுச்சேரியில் மழை பெய்து வருவதால், வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்' - தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details