தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய்த் தொற்றை குறைக்க முடியும்' - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர்

புதுச்சேரி: மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய்த் தொற்றை குறைக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

மல்லாடி கிருஷ்ணாராவ்
மல்லாடி கிருஷ்ணாராவ்

By

Published : Jun 19, 2020, 4:42 PM IST

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூன் 16) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,

"புதுச்சேரியில் இன்று 16 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 12 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையிலும் 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் ஒருவர் காரைக்காலிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை புதுச்சேரியில் 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 162 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

118 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். நோய்த் தொற்றால் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவோரின் எண்ணிக்கை 2 நாட்களாக குறைந்துள்ளது. புதுச்சேரிக்கு தேவையின்றி வருபவர்களை எல்லையில் தடுத்து நிறுத்த சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.

புதுச்சேரியில் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய்த் தொற்றை குறைக்க முடியும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details