புதுச்சேரி மாநிலத்தில் தற்போது கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1151 ஆக உள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 112 பேருக்கு கரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி ராஜ் நிவாஸ் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு நாள்களுக்கு ராஜ் நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.