தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2020ஆம் ஆண்டிற்கான நாள்காட்டி வெளியீடு - environment ministry

புதுச்சேரி: சுற்றுச்சூழல் மையம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நாள்காட்டி  pudhucherry environment ministry release the 2020 calendar  environment ministry  சுற்றுச்சூழல் துறை நாள்காட்டி
சுற்றுச்சுழல் மையம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு

By

Published : Dec 31, 2019, 7:30 PM IST

புதுச்சேரி சுற்றுலாத் தகவல் மையம், மாசு கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மையமும் இணைந்து மாதாந்திர மற்றும் 2020ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியை உருவாக்கியுள்ளது. இந்த நாள்காட்டியில் அந்தந்த மாதத்தில் சிறப்பிக்கப்பட்ட நாள்களின் முக்கியத்தை வலியுறுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அதில் தங்களின் மொபைல் ஃபோனின் மூலம் ஸ்கேன் செய்தால், அதிலுள்ள முழு விவரங்களும் அரசின் சட்டத்திட்டங்கள் குறித்து தகவல்களும் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாள்காட்டி மற்றும் பிளாஸ்டிக் தடை குறித்த விளக்க வழிகாட்டி புத்தகம் ஆகியவற்றை தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

சுற்றுச்சுழல் மையம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு

அதனை சுற்றுச்சூழல் துறை செயலர் அர்ஜூன் சர்மா மற்றும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் சுமிதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பிளாஸ்டிக் தடை குறித்த விளக்க வழிகாட்டி புத்தகம் மற்றும் மற்றும் நாள்காட்டியை புதுச்சேரியிலுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உணவு வைத்த ஊழியர்: கடித்துக் குதறிய சிறுத்தை!

ABOUT THE AUTHOR

...view details