புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவர்களை கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கிரண்பேடியின் செயலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வருத்தம் தெரிவித்தார்.
மருத்துவப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து கரோனாவை எதிர்கொண்டு வருகிற நிலையில், அவர்களை துணை நிலை ஆளுநர் திட்டியது மருத்துவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.