தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவையில் திமுகவினர் உண்ணாவிரதம்! - tamil latest news

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி திருக்கனூர் கடை வீதியில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

pudhucherry dmk fasting protest against farm laws
வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுவையில் திமுகவினர் உண்ணாவிரம்

By

Published : Dec 18, 2020, 4:59 PM IST

Updated : Dec 18, 2020, 11:16 PM IST

புதுச்சேரி:புதுச்சேரி மன்னாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூரில், திமுக சார்பாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு, புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சிவா, வடக்கு மாநில திமுக அமைப்பாளர் சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.

மேலும், இந்தப் போராட்டத்தில், தட்டாஞ்சாவடி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். முன்னதாக, டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

Last Updated : Dec 18, 2020, 11:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details