தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களால்தான் கரோனா பாதிப்பு கூடுகிறது' - pudhucherry corona count

புதுச்சேரி: வெளி மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்கு வருபவர்களால்தான் கரோனா பாதிப்பு அதிகரிப்பதாக புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

மல்லாடி கிருஷ்ணாராவ்
மல்லாடி கிருஷ்ணாராவ்

By

Published : Jun 23, 2020, 3:52 PM IST

புதுச்சேரியில் தினம்தோறும் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாள்களாக இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. புதுச்சேரியில் நேற்று (ஜூன் 22) மட்டும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதித்தோரின் எண்ணிக்கை 402ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், "இதுவரை, 165 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 9 பேர் கரோனாவால் உயிரிழந்தனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு சிலர் சட்டவிரோதமாக வருவதால்தான் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாகவும், அரசு மருத்துவமனையிலுள்ள புறநோயாளிகள் பிரிவை மூடி அங்குள்ள நோயாளிகளை சுபாஷ் சந்திரபோஸ் சாலையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details