புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் பிரமுகரும், காதி போர்டு வாரிய அரசு ஊழியருமான கணேசன் கடந்த இரு வாரங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு..சிபிஐயிடம் ஒப்படைக்க முதலமைச்சரிடம் எம்எல்ஏ மனு - pudhucherry congress leader murder
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் காங்கிரஸ் எம்எல்ஏ லக்ஷ்மி நாராயணன் மனு அளித்துள்ளார்.
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு..சிபிஐயிடம் ஒப்படைக்க முதலமைச்சரிடம் எம்எல்ஏ மனு
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சரின் மக்களவை செயலாளரும் ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான லக்ஷ்மி நாராயணன் தனது தொகுதி மக்களுடன் ஊர்வலமாக வந்து முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனுவினை அளித்தார். அம்மனுவில், காங்கிரஸ் பிரமுகர் கணேசனை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்றும் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:வயதான தம்பதியினரை செருப்பால் அடித்த அரசு ஊழியர்