தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

படுக்கைகள் வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை: மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை - தனியார் மருத்துவமனைகளுக்கு புதுச்சேரி ஆட்சியர் எச்சரிக்கை

புதுச்சேரி: கரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் படுக்கைகளை தனியார் மருத்துவமனைகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

pudhucherry collector press release regarding bed facilities
pudhucherry collector press release regarding bed facilities

By

Published : Aug 20, 2020, 6:46 AM IST

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புதுச்சேரி அரசிடம் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், கரோனா தொற்று சிகிச்சைக்காகத் தேவைப்படும் படுக்கைகளை வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எக்காரணத்தைக்கொண்டும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, ஜிப்மர், அரசு மருத்துவமனைகள் பரிந்துரைக்கும் கரோனா நோயாளிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... 'பொருளாதாரத்தைக் காக்க வங்கிகள் கடன் வழங்க வேண்டும்' - முதலமைச்சர் நாராயணசாமி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details