புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "புதுச்சேரியில் கரோனா தொற்று பாதித்த மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்கள் ஒருவாரத்தில் குணமடைந்து வீடு திரும்பி விடுவார்கள். புதுச்சேரியில் இன்று முதல் கட்டட வேலை, தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்பவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்தத்தப்பட்டது.
இதனால் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. பொதுமக்கள் தேவையின்றி பொது இடங்களில் கூடக்கூடாது. தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்.