புதுச்சேரியில் இதுவரை இல்லாத வகையில் இன்று (ஜூலை 20) ஒரே நாளில் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது, புதுச்சேரியில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதை காட்டுகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவர பேரிடர் மீட்புக் கூட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி நாளை கூட்டவுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "புதுச்சேரியில் ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து எல்லைகள் மூடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரிக்குள் வெளி மாநிலத்தவர் வந்தால் 14 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையிலிருந்து புதுச்சேரி வந்தவர்கள் இதைக் கடைபிடிப்பதில்லை.
பெரும்பாலான மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. நாளை கூடவுள்ள பேரிடர் மீட்புக் கூட்டத்தில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.