பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் இன்று வெளியாக உள்ள சப்பாக் திரைப்படத்திற்கு மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களைத் தொடர்ந்து புதுச்சேரி அரசும் வரிச்சலுகை அளித்துள்ளது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்கையை மையமாக வைத்து திரைக்குவரும் சப்பாக் படத்தில் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.