தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கைதிகளுக்கு செல்போன் விற்ற 4 சிறைக் காவலர்கள் பணியிடைநீக்கம்!

புதுச்சேரி: சிறைச்சாலையில் செல்போன்களை கடத்தி விற்றதாக சிறைக் காவலர்கள் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி 4 சிறை காவலர்கள் பணியிடைநீக்கம் காலாப்பட்டு 4 சிறை காவலர்கள் பணியிடைநீக்கம் சிறை காவலர்கள் பணியிடைநீக்கம் Pudhucherry 4 Jail Police Suspend Kalapet 4 Jail Police Suspend Prison Police Suspend Pudhucherry Prison Police suspend
Pudhucherry 4 Jail Police Suspend

By

Published : Jan 22, 2020, 2:12 PM IST

புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகள், ரவுடிகள் செல்போன் மூலம் மிரட்டி, தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பதாகப் புகார் எழுந்தது. மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறையில் இருந்து நிதிஸ் சர்மா என்பவர் தமிழ்நாடு, புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 10க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், பணத்திற்காகச் சிறைக் காவலர்கள், செல்போன்களை கடத்தி கைதிகளுக்கு விற்று இருப்பது தெரியவந்தது.

காலாப்பட்டு மத்திய சிறை

இதனைத் தொடர்ந்து, கைதிகளுக்கு செல்போன் விற்ற சிறைக் காவலர்கள் சபரி, சங்கர், சீனு, ராமச்சந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:

செல்போன் பறிப்பில் ஈடுபட்டரை மடக்கிப் பிடித்த காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details