இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகளின் வசதிக்காக தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் பொதுமக்கள் மருத்துவ சேவைகளை சுலபமாக பெறுவதற்கு கூடுதல் தொலைபேசி எண்கள் சேவை வரும் 26ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
புதுச்சேரி ஜிப்மரில் கூடுதல் தொலைபேசி சேவை! - தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை
புதுச்சேரி: பொதுமக்கள் மருத்துவ சேவைகளை சுலபமாக்க ஏதுவாக ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26ஆம் தேதி முதல் கூடுதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர்
இந்த தொலைபேசி எண்கள் மூலம் வெளிப்புற சேவைகளை மக்கள் எளிதாக பெற முடியும். அதன்படி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் இந்த சேவைகள் செயல்படும்" என தெரிவித்துள்ளார்.
- பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை பெற ஏற்கனவே பதிவு செய்த நோயாளிகள், 0413 2298200 என்ற எண்ணிற்கும்,
- புதிதாக பதிவு செய்ய விரும்பும் நோயாளிகள் 2298303 என்ற எண்ணிற்கும்
- இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு 6384400741, 6384400742 என்ற எண்ணிற்கும்
- எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சைக்கு 63844 00749, 63844 00750 என்ற எண்ணிற்கும்
- புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்கு 6384400751, 6384400752 என்ற எண்ணிற்கும்
- மகப்பேறு பெண்கள் தொடர்பாக 63844 00753, 6384400754 என்ற எண்ணிற்கும்
- பச்சிளம் குழந்தை தொடர்பாக 6384400759, 6384400760 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பயம்பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவரை குடும்பத்தினருடன் சேர்த்துவைத்த ’டிக் டாக்’