தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வுசெய்த முதலமைச்சர்!

புதுச்சேரி: புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால், மழைநீர் சூழ்ந்த ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் பகுதிகளை முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வுசெய்து, மழைநீரை விரைந்து வெளியேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி
புதுச்சேரி

By

Published : Dec 4, 2020, 12:13 PM IST

புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று (டிச. 03) காலை 08.30 மணிமுதல் இன்று (டிச. 04) காலை 08.30 மணிவரை 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இரவு தொடங்கிய மழையானது தற்போதுவரை தொடர்ந்து பெய்துவருகின்றது. இதனால் நகர், கிராமப்பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பூமியான்பேட்டை, கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவிலிருந்து மழைநீர் சூழ்ந்துள்ளது.

மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை புதுச்சேரி முதலமைச்சர் நேரில் ஆய்வு
இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முழங்கால் அளவிலான நீரில் சென்று ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து மின்மோட்டார் வைத்து நீரை வெளியேற்றும் பகுதியை ஆய்வுசெய்து, மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள நீரை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் வைத்து பொதுப்பணித் துறை, நகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்றிவருகின்றனர்.

இதற்கிடையே கனமழை காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளையும் (டிச. 05) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புரெவி புயல்: சென்னை விமான நிலையத்தில் 3ஆவது நாளாக 12 விமானங்கள் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details