புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதம் வரை மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் கூட்டம் இயக்குநரக அலுவலகத்தில் நடைபெற்றது. கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கல்வித்துறை செயலர் அன்பரசு, புதுச்சேரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், "மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்குவதற்கான அடிப்படைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.