புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் நூற்றாண்டு பழமையான ஏ.எஃப்.டி பஞ்சாலை அமைந்துள்ளது. கடந்த தானே புயலின்போது இப்பஞ்சாலை பலத்த சேதத்திற்குள்ளானதால், இயக்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து, ஊழியர்களின் ஊதியப் பிரச்னை காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பஞ்சாலை இயக்கப்படாமல் இருந்து வருகிறது.
ஏ.எஃப்.டி மில்லில் திடீர் தீவிபத்து! - aft mill
புதுச்சேரி: நூற்றாண்டு பழமைவாய்ந்த ஏ.எப்.டி பஞ்சாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.

fire
எ.எஃப்.டி மில்லில் தீ விபத்து
இந்நிலையில், பஞ்சாலையில் உள்ள ஏ யூனிட் பிரிவில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகள், நேற்று மாலை, திடீரென தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்றனர்.
தொடர்ந்து, மளமளவெனக் கொழுந்துவிட்டு எரிந்த தீயை பலமணிநேர போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.