தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பொதுத் துறை வங்கிகள் மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் தலைமையில்தான் மோசமான நிலையை எட்டின' - Latest updates on Nirmala Sitharaman

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூட்டணியின் கீழ்தான் இந்தியப் பொதுத் துறை வங்கிகள் மோசமான நிலையை எட்டியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Nirmala Sitharaman

By

Published : Oct 16, 2019, 10:47 PM IST

வங்கித் துறையில் மிக மோசமான ஊழல் கறையை தன் ஆட்சியின் முடிவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் விட்டுச் சென்றுள்ளதாகவும், வங்கித் துறை மோசமான காலகட்டத்தை அவரின் தலைமையின்கீழும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலும்தான் எட்டியது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இண்டர்நஷேனல் அண்ட் பப்ளிக் பள்ளியில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், அனைத்து பொதுத் துறை வங்கிகளையும் உயிர்ப்பிப்பதே தன் தற்போதைய தலையாய கடமையெனத் தெரிவித்தார். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது தொலைபேசி அழைப்புகளின் மூலமே நட்பிலிருந்த தலைவர்களுக்கு கடன் வழங்கியதாகவும் பொதுத் துறை வங்கிகள் இந்தக் குழப்பங்களைவிட்டு வெளியேற அரசினை சார்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் இங்கே யாரையும் நகைப்புக்குள்ளாக்கவில்லை. ஆனால் உண்மையை கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறித் தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூட்டணியின் கீழ்தான் இந்தியப் பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிலையை எட்டியது எனக் கூறினார்.

இந்தத் தகவல் அப்போது நமக்குத் தெரியவில்லை என்றும், தற்போதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் பேசிய அவர், தற்போது யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள், முன்பு யார் இருந்தார்கள் என்று ஆராய்வதை விட்டுவிட்டு, ரகுராம் ராஜன் ஆளுநராக இருந்த காலகட்டத்தில் வங்கித் துறையின் நிலை என்னவாய் இருந்தது என்பதை, தான் அறிய விரும்புவதாகவும் ஒரே இரவில் வங்கித் துறை இவ்வாறு உயிர்ப்பிக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட வாய்ப்பே இல்லை என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அயோத்தியா வழக்கு: முடிவுக்கு வந்த 40 நாள் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details