புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் நகரபகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகிவருனர்.
சாலைகளை சீரமைக்ககோரி எம்எல்ஏ தலைமயில் பொதுமக்கள் சாலை மறியல் - கனமழை காரணமாக சாலைகள் சேதம்
புதுச்சேரி: மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் புதுச்சேரி முதலியார் பேட்டை - கடலூர் சாலை சேதமடைந்து அதிக தூசுகள் பரவி வாகனஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி முதலியார்பேட்டை தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி - கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து பொதுமக்கள் மறியலிலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.