தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Pubg game Murder: தந்தையை துண்டு துண்டாக்கிய மகன்..! பெல்காவியில் நடந்தேறிய கொடூரம்! - recharge

பெங்களூர்: மொபைல் ரீசாஜ் செய்ய பணம் தராத தந்தையை, மகன் துண்டுதுண்டாக கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை கொலை

By

Published : Sep 9, 2019, 11:24 AM IST

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்திலுள்ள, காகத்தி தாலுகாவில் வசித்து வருபவர் சங்கரப்பா(59). இவருக்கு 21 வயதான ரகுவீர்குமார் என்ற மகன் உள்ளார். ரகுவீர் மொபைல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. அதிலும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து, அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பப்ஜி எனும் விளையாட்டை நாள் முழுவதும் விளையாடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த ரகுவீரின் தந்தை, பப்ஜி விளையாட்டை விளையாடக்கூடாது என்று அவ்வப்போது கூறியதாகவும், இதுவே இருவரிடையே சண்டை வரக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று தன் மொபைலில் இணைய வசதி துண்டிக்கப்பட்டதால் பப்ஜி விளையாட்டை விளையாட, தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார் ரகுவீர். சங்கரப்பா பணம் தர முடியாது என்று சொல்ல, இருவருக்கிடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டு, முடிவில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கோபமடைந்த ரகுவீர், வீட்டு சமையலறையிலிருந்த அருவாள் மனையை எடுத்து வந்து, தந்தையின் தலையையும், ஒரு காலையும் துண்டாக அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இந்நேரத்தில், சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சங்கரப்பாவின் வெட்டப்பட்ட உடற்பாகங்களுடன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரகுவீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த மகனே பப்ஜி விளையாட்டிற்காகத் தந்தையைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details