இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராகவும் இந்தியர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையிலும் செயல்படுவதாகக்கூறி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிக் டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு ஜூன் 29ஆம் தேதி தடை விதித்தது.
இந்தத் தடையிலிருந்து பப்ஜி, கால் ஆஃப் டியூட்டி ஆகிய புகழ்பெற்ற வீடியோ கேம்கள் எப்படி தப்பியது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஏனென்றால், இவ்விரு நிறுவனங்களிலும் சீனாவைச் சேர்ந்த டென்சென்ட் நிறுவனம் பெருமளவு முதலீடு செய்துள்ளது.
பப்ஜி:
பப்ஜி முற்றிலும் சீனர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதால் அவை தடையிலிருந்து தப்பியிருக்கலாம். பப்ஜி விளையாட்டு தென் கொரியாவைச் சேர்ந்த புளூஹோல் என்று நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
பப்ஜி ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, சீன நிறுவனமான டென்சென்ட், சீனாவில் பப்ஜி விளையாட்டை சந்தைப்படுத்த புளூஹோல் நிறுவனத்துடன் கைகோர்த்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவிலும் இந்த விளையாட்டை டென்சென்ட் நிறுவனம்தான் விநியோகிக்கிறது.