இந்தியாவில் கோவிட்-19 பரவல் குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். கோவிட்-19 பரவல் குறித்து முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், "டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டும் நாட்டில் கரோனாவை பரப்பவில்லை என்றால் நாம் இவ்வளவு காலம் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கத் தேவையில்லை.
அவர்களது குற்றவியல் அலட்சியத்தால்தான் நாம் இவ்வளவு நீண்ட காலம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். அவர்களால்தான் பொதுமக்கள் கஷ்டப்படுகிறார்கள். மாநாட்டில் பங்கேற்ற சிலர் கிராமங்களில் ஒளிந்துகொண்டு, கரோனா தொற்று பரவ முக்கிய காரணமாக இருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தானாக முன்வராமல் இருந்ததுதான் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. அப்படிச் செய்திருந்தால் நூற்றுக்கணக்கானோரை கரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே முன்வந்து மருத்துவ வசதிகளைப் பெற்றிருக்கலாம். அரசம் அவர்களுக்கு உதவத் தயாராகவே இருந்தது.
டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜஃப்ருல் இஸ்லாம், தனது சொந்த நாட்டை விட்டுவிட்டுப் பிற நாடுகளின் உதவியை நாடியது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.