இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “மார்ச்-ஏப்ரல் ஆகிய இருமாதங்களில், பொதுத்துறை வங்கிகள் 41 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன்களை வழங்க இசைவு அளித்துள்ளது. ஊரடங்கும் முழுமையாக தளர்த்தப்பட்டவுடன் நாட்டின் பொருளாதாரத்தை எம்.எஸ்.எம்.இ, சில்லறை வணிகம், வேளாண்மை, பெருநிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, இந்த கடனுதவி விரைவில் சென்றடையும்.
கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்தத் தடையை அரசுக்குச் சொந்தமான வங்கிகள் செயல்படுத்தியுள்ளன. பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் கடன் வசூல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி, ரிசர்வ் வங்கி அறிவுரையை கடைப்பிடித்துள்ளன.
அவற்றின் பயனுள்ள தகவல் தொடர்பு, செயல்திறன் மிக்க நடவடிக்கைகளால் 3.2 கோடிக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் 3 மாத கால அவகாசம் பெற்று பயனடைந்திருப்பதை உறுதி செய்தன. பொதுத் துறை வங்கிகள் வழங்கிய விரைவான தீர்வுகள் வாடிக்கையாளர்களின் கவலைகளைத் தீர்த்தன.
பொதுத்துறை வங்கிகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி வரை 77 ஆயிரத்து 383 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை என்.பி.எஃப்.சி மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களுக்கு கடனை வழங்க அனுமதித்துள்ளன. இலக்கு வைக்கப்பட்ட நீண்ட கால ரெப்போ நடவடிக்கைகளின் (டி.எல்.டி.ஆர்.ஓ) கீழ், வணிகப் பாதுகாப்பை, வளர்ச்சிக்கான தொடர்ச்சியை முன்னோக்கிச் செலுத்துவதை உறுதிசெய்ய மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
எம்.எஸ்.எம்.இ உள்ளிட்ட பிறருக்கு, முன் அங்கீகரிக்கப்பட்ட அவசர கடன் உதவி, பணிகள் தொடங்கத் தேவையான மூலதன மேம்பாடுகள் பொதுத் துறை வங்கிகளால் முன்னுரிமை அளிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. இந்த உதவிக்காக, மார்ச் 20 ஆம் தேதி முதல் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்புக் கொண்டுள்ளனர்.
அதில் 2 லட்சத்து 37 ஆயிரம் பயனாளிகளுக்கு, 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய, 2020 ஜூன் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. தாமதமாக செலுத்தப்படும் வருமான வரிக்கான வட்டி, 12 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆதார்-பான் இணைப்புக்கான கெடு மார்ச் 31 ஆம் தேதியிலிருந்தது, அது ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.”என தெரிவித்தார்.
இதையும் படிங்க :தொழிலாளர் சட்டங்களுக்கு விலக்கு அளித்த உத்தரப் பிரதேச அரசு