புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். புதுச்சேரி உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மாநகர பேருந்துகளும் அடக்கம். இதை தவிர்த்து சுமார் 50 மினி பேருந்துகளும் உள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரியும், கடந்த ஆண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும் என இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்து கழக ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவையிலுள்ள 3 மாத ஊதியம், கடந்த ஆண்டு போனஸ்; பணிக்கு திரும்புங்கள்! - Bus Strike In Pondy
புதுச்சேரி: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள 3 மாத ஊதியம் மற்றும் கடந்த ஆண்டிற்கான போனஸ் தொகை, இன்றே வழங்கப்படும் எனவும், போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புமாறும் மேலாண் இயக்குநர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதையடுத்து புதுச்சேரி சட்டமன்ற வளாக கமிட்டி அறையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பிஆர்டிசி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் சில முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து பணியாளர்கள், ஓட்டுனர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து, 4வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பிஆர்டிசி வெளிமாநில பேருந்துகள், மாநகர பேருந்துகள், மினி பேருந்துகள், ஏசி பேருந்துகள் என அனைத்தும் உருளையன்பேட்டை பிஆர்டிசி டெப்போவில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் பிஆர்டிசி மேலாளர் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம்,கடந்த ஆண்டு போனஸ் இன்று வழங்கப்படும். போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புமாறும், ரூ.5 கோடியே 80 லட்சம் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.