புதுச்சேரி அரசுத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகம் சார்பில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த முன்று மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்றுக்கூறி ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி - ஊழியர் தற்கொலை
புதுச்சேரி: போக்குவரத்து கழகத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஐஎன்டியூசி தொழிற்சங்க துணைத்தலைவர் சத்தியநாராயணன் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பலமுறை நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று கூறி ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தை சேர்ந்த துணைத்தலைவர் சத்தியநாராயணன் போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் .இதை பார்த்த சக ஊழியர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் சத்திய நாராயணனிடம் விசாரணை நடத்தியதில், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதனை வழங்காததால் விரக்தியடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். அரசு அலுவலகம் முன்பு ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.