தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதில் சாதனை படைத்த டிஆர்டிஓ - ராஜ்நாத் சிங் - டிஆர்டிஓ

டெல்லி: தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் சாதனை படைத்த டிஆர்டிஓ தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளதைக் கண்டு பெருமைப்படுவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

By

Published : Jan 1, 2021, 5:43 PM IST

Updated : Jan 1, 2021, 6:05 PM IST

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) 63ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் சாதனை படைத்த டிஆர்டிஓ தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளதைக் கண்டு பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "டிஆர்டிஓவின் 63ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தற்சார்பு இந்தியாவைக் கட்டமைப்பதில் சாதனை படைத்த டிஆர்டிஓ தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளதைக் கண்டு பெருமைப்படுகிறேன். இந்த 2021ஆம் ஆண்டிலும் வரும் காலங்களிலும் எண்ணற்றச் சாதனைகளைப் படைக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும் அமைப்பையும் மேம்படுத்தி இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற உறுதி ஏற்கிறோம் எனப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து டிஆர்டிஓவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஆராய்ச்சி, வடிவமைப்பு, வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு என்ற பாதையில் வீறுநடை போட்டு முன்னோக்கிச் செல்வோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1958ஆம் ஆண்டு, டிஆர்டிஓ 10 ஆய்வகங்களுடன் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நோக்குடன் சிறிய அமைப்பாகத் தொடங்கப்பட்டது. தற்போது, பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ள இந்த அமைப்பு பல சாதனைகளைப் படைத்துள்ளது.

Last Updated : Jan 1, 2021, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details