இந்தியாவிலுள்ள நிலக்கரியை அகழ்ந்து எடுக்கவில்லையெனில், அது வீணாக மண்ணாகி விடும் என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். தற்போது, நிலக்கரி சுரங்கத் தொழிலில் தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டெஹிங் பட்காய் சரணாலயத்திலும் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான திட்டத்தை அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்த சரணாலயத்தில் 293 வெவ்வேறு வகையான பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. முக்கியமாக இது பாதுகாக்கப்பட்ட யானைகளின் பகுதியாகும். இதன் பல்லுயிர்தன்மையை குலைக்கும் வண்ணம் அரசு விடுத்து இந்த அறிவிப்பை உல்பா அமைப்பு எதிர்த்துள்ளது.
இது குறித்து உல்பா அமைப்பின் செயலாளர் ரூபாக் அசோம் கூறுகையில், “நாங்கள் டெஹிங் பட்காய் சரணாலயத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. தனித்துவமான உயிர்களின் பல்லுயிர்த்தன்மை குறித்து எவ்வித புரிதலும் இந்திய அரசுக்கு இல்லையென நாங்கள் அறிவோம்.