தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜே.என்.யு. விவகாரம் எதிரொலி: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

ஹைதராபாத்: ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அம்மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஹைதராபாத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

hyderabad students
hyderabad students

By

Published : Jan 6, 2020, 11:01 PM IST

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகமூடி அணிந்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இடதுசாரி மாணவ அமைப்பச் சேர்ந்த பலரும் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தைக் கண்டித்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், மவுலான ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், ஒஸ்மானிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது வலதுசாரி ஆதரவு மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறி அந்த அமைப்புக்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் அந்த அமைப்பின் உருவ பொம்மையை எரித்து தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இடதுசாரி மாணவ அமைப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அவர்களின் உருவ பொம்மையை எரித்தனர். இதில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் காவல் துறையினர் போராட்டத்தைக் கண்கானித்துவந்தனர்.

ஜே.என்.யு. மாணவர்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து, ஹைதராபாத்தின் புகழ்பெற்ற டாங்க் பண்ட் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன் மாணவர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.

இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவின் டீ ஏற்றுமதிக்கு அடி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details