தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஜடியு போராட்டம் - சிஜடியு போராட்டம்

புதுச்சேரி : அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்கத்தை நலவாரியமாக மாற்றக் கோரி, சிஐடியு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

Auto drivers protest
Auto drivers protest

By

Published : Aug 27, 2020, 5:32 PM IST

”அமைப்புசாரா நலச் சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும், பேரிடர் கால நிவாரணமாக குடும்பங்களுக்கு தலா 12,500 ரூபாய் வழங்க வேண்டும். ஆட்டோ, கார், வேன், உள்ளிட்ட சுற்றுலா வாடகை வாகனங்களுக்கான சாலை வரி, வாகன புதுப்பித்தல் வரி, வங்கி வாகனக் கடன் உள்ளிட்டவை வசூலிப்பதை ஓராண்டுக்குத் தள்ளிவைக்க வேண்டும்” என, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி நீதிமன்ற வளாகம் எதிரில் உள்ள ஏ.எஃப்.டி மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். இப்போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள், சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், சாலை வியாபாரிகள், தனியார் போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள் எனப் பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதற்கு சிஐடியு பிரதேசச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இதையும் படிங்க:சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details