புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் சார்பாக முதலமைச்சர் நாராயணசாமி, அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அனந்தராமன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் - காங்கிரஸ் கூட்டணி - காங்கிரஸ்
புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜூலை 16ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டம் - காங்கிரஸ்
அப்போது, புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 16ஆம் தேதி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்துச் சென்று பிரதமர் மோடி, பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.