மத ரீதியாக மக்களைப் பிளவுப்படுத்தும்வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட மக்கள் விரோத கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரியை அடுத்துள்ள கோட்டக்குப்பம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து அப்பகுதி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசிற்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டத்தில் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.