புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியை கோயில் நிர்வாகத்தினர் காட்டில் கொண்டு விடுவதாக தகவல் வெளியானது. அதனையறிந்த புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக நிர்வாகி கணேசன் உள்ளிட்ட மூன்று பேர் இன்று (ஜூன் 5) காந்தி வீதியில் அதற்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்தனர். அதில் அவர்கள் லட்சுமி யானை 6 வயதிலிருந்து 23 ஆண்டுகளாக புதுச்சேரியில் வாழ்ந்துவருகிறது. அது மணகுள விநாயகர் பக்தர்கள் மனதில் அங்கமாகிவிட்டது.
புதுச்சேரியில் ஆலய யானையை காட்டில் கொண்டு விட எதிர்ப்பு - puducherry latest news
புதுச்சேரி: மணகுள விநாயகர் கோயில் யானையை காட்டில் கொண்டு விட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மணகுள விநாயகர் கோயில் யானைமணகுள விநாயகர் கோயில் யானை
எனவே அதனை காட்டில் விடும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். அதனையறிந்த காவல்துறையிர் சம்பவ இடத்திற்கு விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் யானையை காட்டுக்குள் விடப்போவதாக முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் கோயில் நிர்வாகத்தினர் அதனை வேளாண்மை கல்லூரிக்கு கொண்டுச் செல்ல உள்ளனர் எனப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.