மத்திய அரசு சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தியும், புதுச்சேரியில் வழங்கப்படாமல் இருக்கும் இலவச ரேஷன் அரிசி வழங்க வலியுறுத்தியும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்கவும், பேருந்து கட்டணத்தைக் குறைக்க வேண்டியும், மூடிக் கிடக்கின்ற மூன்று பஞ்சாலைகளை திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எரிவாயு உருளை விலை உயர்வு: பெண்கள் ஒப்பாரி போராட்டம்! - protest against gas cylinder price hike
புதுச்சேரி: எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) விலையைக் குறைக்க வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி ஆலை அருகே நடைபெற்ற இந்த ஒப்பாரி ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு உருளை, விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புதுச்சேரி தலைவி சந்திரா தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணைத் தலைவர் லாவண்யா, மாநிலத் தலைவர் சத்யா உள்ளிட்ட அனைத்து இந்திய மாதர் சங்கத்தின் பெண்கள் பலர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.