தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் உள்ள சீன சந்திப்புப் பகுதியில் நிலவும் அமைதி! - சீனா பொருட்கள் புறக்கணிப்பு

திருவனந்தபுரம்: இந்திய - சீனப் படைகளுக்கு எதிராக மோதல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் கேரளாவில் சீனா எனப் பெயரிடப்பட்ட பகுதி ஒன்றில் தற்போதுவரை அமைதி நிலவிவருகிறது.

kerala
kerala

By

Published : Jun 25, 2020, 4:10 AM IST

கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, நாட்டில் பல பகுதிகளில் சீனப்பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதோடு, அந்நாடு நடத்தியத்தாக்குதலுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர், எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சீனா சந்திப்பு (China junction) என்கின்ற பகுதியில் தற்போதுவரை அமைதி நிலவிவருகிறது. கல்வானில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டபோது மட்டும் இங்கு கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

1950ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா வந்தபோது, பத்தனம்திட்டா - கொன்னி சந்திப்பு பகுதியில் இந்திய நாட்டுக்கொடியைக் காட்டிலும் அம்மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, அப்பகுதிக்கு ’சீனா சந்திப்பு’ எனப் பெயர் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'விரைவில் பதஞ்சலியின் கரோனா மருந்துக்கு அனுமதி அளிக்கப்படும்'

ABOUT THE AUTHOR

...view details