கர்நாடகாவில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கொலை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
இரவு காவாளியாக பணிபுரியும் முகுந்த் என்பவர் பாலியல் தொழில் செய்யும் மஞ்சுளா என்ற பெண்ணை பேருந்து நிலையத்தில் பார்த்து பேசி, அப்பெண்ணின் வீட்டிற்கு அவளுடன் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டில் அப்பெண்ணை பாதுகாப்பற்ற முறையில் உறவு வைக்க முயன்றார். இதற்கு மஞ்சுளா மறுப்பு தெரிவித்ததையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் கோபத்திற்கு உச்சத்திற்கு சென்ற முகுந்த் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்ய முயன்றபோது, அவரை தள்ளிவிட்ட மஞ்சுளா தனக்குத் தரவேண்டிய 1500 ரூபாயை கேட்டு சத்தம்போட்டார்.
கழுத்தறுத்து கொலை
இதனால், அதிர்ச்சியடைந்த முகுந்த், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் மஞ்சுளாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்து கொலைசெய்துவிட்டு, அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் செல்போனையும் தூக்கிச் சென்றுவிட்டார்.
அதன்பின், மாலையில் வீட்டிற்கு வந்த மஞ்சுளாவின் மகன், தனது தாயார் கொடூரமாக உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் குற்றவாளி முகுந்தை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தங்கக்கட்டி விற்பனை - நூதன முறையில் ரூ. 40 லட்சம் கொள்ளை!