கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் முகுந்த் என்பவர் காவலாளியாக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பேருந்து நிலையம் ஒன்றில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை முகுந்த் பார்த்துள்ளார். பின்னர் அவரை உடலுறவுக்கு அழைத்து, பாலியல் தொழிலாளியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அப்பெண் பாதுகாப்புக்காக ஆணுறை பயன்படுத்தும்படி, முகுந்திடம் கூறியுள்ளார்.
இதற்கு முகுந்த் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முகுந்த், தான் கொடுத்த ரூ.1500 பணத்தை திருப்பித் தரும்படி பாலியல் தொழிலாளியிடம் சண்டையிட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்புத் தெரிவித்து சத்தமிடவே, மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, அப்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த தங்க நகைகளையும், செல்போனையும் எடுத்துக்கொண்டு முகுந்த் அங்கிருந்து தப்பியுள்ளார்.