காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார்.
பாஜகவின் நடவடிக்கை குறித்து பேசிய அவர், ' மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் அவமானத்திற்குரியது எனவும், நாட்டின் ஜனநாயக மாண்பை பாஜக குழி தோண்டி புதைத்து வருகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.