தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஆர்பிஎஃப் வீரர்களில் 146 பேருக்கு கரோனா உறுதி! - Probe into COVID-19 outbreak within CRPF unit to complete soon

டெல்லி: கரோனா வைரஸால் மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

probe-into-covid-19-outbreak-within-crpf-unit-to-complete-soon
probe-into-covid-19-outbreak-within-crpf-unit-to-complete-soon

By

Published : May 5, 2020, 5:15 PM IST

டெல்லியில் உள்ள மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார். இவர் 31ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்த நிலையில், இவரின் பட்டாலியனில் உள்ள அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.

இதுகுறித்து மத்திய ஆயுதப்படை தலைமை அலுவலர் மகேஷ்வரி பேசுகையில், ''கரோனாவால் முதல் சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே அவருடன் பணியாற்றிய அனைவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் வீரர்களில் இதுவரை 137 பேர் உட்பட மொத்தம் 146 பேர் பாதிக்கப்பட்டு, இருவர் மீண்டுள்ளனர்.

சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்தில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டடம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. முக்கிய அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றி வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சரக்கு வேணுமா வாங்க...' - மதுபான விலையை 70 விழுக்காடு ஏற்றிய டெல்லி அரசு!

ABOUT THE AUTHOR

...view details