உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடத்தினார்.
அப்போது மாநில பாஜக அரசின் மூன்றாண்டு சாதனை பட்டியல் வெளியிடப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்வீட்டரில், “சாதனை அறிக்கையை பாஜக அரசு வெளியிட்டுள்ளது. இந்தச் சாதனை அறிக்கை பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு குறித்து மாநில அரசு பெருமிதம் கொள்கிறது.
கொடூரமான உன்னாவ் பாலியல் சம்பவத்துக்கும் பிறகும் மாநிலத்தில் வன்புணர்வு சம்பவங்கள் நடக்கின்றன. இது மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பை அம்பலப்படுத்துகிறது. இதில் அரசாங்கம் எப்போது விழித்துக் கொள்ள போகிறது” என கேள்வியெழுப்பி உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் அண்மையில் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அவரின் மூக்கு வெட்டப்பட்டது. இதனை நினைவுப்படுத்தி பிரியங்கா காந்தி இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனாவுக்கு எல்லை கிடையாது, சர்வதேச ஒத்துழைப்பு தேவை'- பிரான்ஸ் தூதர் இமானுவேல் லெனைன்