தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தும் உ.பி. அரசு - பிரியங்கா காந்தி கண்டனம்! - யோகி ஆதித்தயநாத் அரசு

டெல்லி: உ.பி. அரசு மக்கள் பிரச்சனையில் மௌனம் காப்பது மட்டுமின்றி அத்தியாவசிய பொருள்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.

g
g

By

Published : Oct 27, 2020, 12:22 PM IST

உத்தரப் பிரதேசத்தில் போலி பரப்புரைக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்கும் உ.பி., அரசு அத்தியாவசிய பொருள்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில், " பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலையை உயர்த்துவது மக்களின் மீது அழிவை ஏற்படுத்தும் செயல் ஆகும். காய்கறிகளின் விலை உச்சத்தை அடைந்துள்ளன. போலி பரப்புரைக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கும் பாஜக அரசு, மக்களின் பிரச்னையில் மௌனம் காத்து வருகிறது ஏன்" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், அந்த பதிவுடன் லக்னோவில் விற்கப்படும் காய்கறிகளின் விலையையும் குறிப்பிட்டிருந்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details