காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது புதிய தாக்குதல் ஒன்றை தொடர்ந்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கருத்து தெரிவித்த நரேந்திர மோடி, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. குறித்து யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கண்டனம் - வாரணாசியில் 144 தடை
டெல்லி: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Priyanka slams PM over Section 144 in Varanasi
இதற்கு பதிலளிக்கும்விதமாக ட்விட்டரில் பிரியங்கா காந்தி, "பிரதமர் யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறுகிறார். ஆனால் அவரின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் 2019ஆம் ஆண்டில் 365 நாள்களில் 359 நாள்கள் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சொல்ல அவரால் எப்படி முடிகிறது?" எனப் பதிவிட்டுள்ளார்.