தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பூட்டப்பட்ட வீடுகளுக்கு மின் கட்டணமா ? பிரியங்கா காந்தி போர்க்கொடி - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மின் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

Priyanka
Priyanka

By

Published : Nov 6, 2020, 3:58 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மின்சார கட்டணம் அதிகரித்து வருவதாகவும், இதனால் நெசவாளர்கள், கைவினை கலைஞர்கள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த எட்டு ஆண்டுகளில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி, கிராமப்புறங்களில் 500 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 84 விழுக்காடும், விவசாயிகளுக்கு 126 விழுக்காடும் உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

பூட்டப்பட்ட வீடுகளில் கூட எட்டாயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வசூலிப்பதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மின்சார மீட்டர் நிறுவப்படாமல் உள்ள வீடுகளிலும் மின் கட்டணம் செலுத்துமாறு ரசீது வருவதாகவும் கூறினார். பயிர்கள் விற்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டண உயர்வு விவசாயிகளுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த கட்ட உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மின் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து முறையாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டுக் கொண்டார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details