புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படாததைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயளாலர் பிரியங்கா காந்தி,ட்வீட் செய்துள்ளார். அதில், “வெளி மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசம் செல்ல அம்மாநில அரசு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், தொழிலாளர்கள் இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
காசியாபாத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்குச் செல்ல காத்திருக்கிறார்கள். உத்தரப் பிரதேச அரசிடம் எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. அவர்களை கொண்டுச் செல்வதற்கான முறையான நடைமுறைகளை ஒரு மாதத்திற்கு முன்பு நிறுவப்பட்டிருந்தால், தொழிலாளர்கள் இவ்வளவு சிரமத்திற்குள்ளாகி இருக்க மாட்டார்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.