கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவி தொகை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேச முதலமைச்சர் பிரதமர் மோடியை அழைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். அதன்மூலம், லட்சக்கணக்கான சிறு குறு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியின் பெருமையான நெசவாளர்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.