தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘கைவினைப்பொருள் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’- பிரியங்கா காந்தி - கைவினைப்பொருள் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்- பிரியங்கா காந்தி

டெல்லி: கைவினைப்பொருள் தயாரிப்பு ஊழியர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

‘கைவினைப்பொருள் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்’- பிரியங்கா காந்தி
‘கைவினைப்பொருள் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்’- பிரியங்கா காந்தி

By

Published : Apr 23, 2020, 4:33 PM IST

ஊரடங்கு உத்தரவின் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்டவைகளால் அவதிப்பட்டுவந்த மக்கள் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை, மனத்தில் வைத்துக்கொண்டு உத்தரப் பிரதேச அரசு அனைத்து கைவினைப்பொருள் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கிட வழிவகுக்க வேண்டும்.

இதேபோல், சிறு, குறு தொழிலாளர்கள், அதில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வெறுப்புணர்வு வைரஸை பாஜக பரப்புகிறது - சோனியா காந்தி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details