தமிழ்நாடு

tamil nadu

'தரமற்ற உபகரணங்கள் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - பிரியங்கா காந்தி

By

Published : Apr 27, 2020, 5:03 PM IST

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் தரமற்ற கரோனா உபகரணங்கள் குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு தரமற்ற கரோனா உபகரணங்கள் வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, 'மருத்துவக் கல்லூரி இயக்குநருக்குக் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், மருத்துவக் கல்லூரிக்கு தரமற்ற கரோனா உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மருத்துவக்கல்லூரிகளில் தரமற்ற கரோனா உபகரணங்கள் வழங்கிய நபர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல், இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

இதுபோன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளுக்குத் தரமற்ற கரோனா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் மருத்துவர்களிடம் இதுபோன்று யாரும் விளையாட வேண்டாம்.

இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'கரோனா கண்டறிதல் சோதனையை அதிகரிக்க பிரதமர் வேகமாகச் செயல்பட வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details