தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

69,000 ஆசிரியர்கள் நியமனம்: உ.பி அரசின் வியாபம் என்று சாடிய பிரியங்கா காந்தி - உச்சநீதிமன்றம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 69,000 பேர் நியமனத்தை, மாநிலத்தின் வியாபம் ஊழல் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

priyanka gandhi
priyanka gandhi

By

Published : Jun 8, 2020, 5:04 PM IST

வினாத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி நடந்துள்ளதாகக் கூறி, உத்தரப் பிரதேச அரசு நியமித்த, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 69,000 பேரின் நியமனத்தையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "இந்த விவகாரத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள் இயல்பானவை அல்ல. மோசடி, பதிவேடுகளில் உள்ள மாணவர்களின் பெயர்கள், பண பரிவர்த்தனை, தேர்வு மையங்களில் முரண்பாடுகள் ஆகியவை, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் தொடர்புடையவர்களின் இணைப்புகள் மிகப்பெரியவை என்பதை சுட்டிக்காட்டுகின்றன" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த 69,000 ஆசிரியர்களின் நியமனம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வியாபம் ஊழல் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த ஆசிரியர்கள் நியமனத்தில் கடினமாக உழைத்த இளைஞர்களுக்கு மாநில அரசு உரிய நீதி வழங்காவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை மே 21 அன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான வழிமுறைகளை விளக்கப்படம் மூலம் விளக்குமாறு மாநில அரசிற்கு உத்தரவிட்டது, மேலும், பொதுப்பிரினவர் தேர்ச்சி அடைய 45 விழுக்காடு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற அளவுகோளை மாற்றி அமைத்தது ஏன் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வியாபம் ஊழல்: மத்தியப் பிரதேசத்தில் தொழில்முறைக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கும், அரசு வேலையில் சேர்வோருக்கும் தகுதித் தேர்வு நடத்துவதுதான் 'வியாபம்' நிறுவனத்தின் பிரதான பணியாகும். 'வியாபம்' ஊழலில் நான்கு நூதனமான முறைகள் கையாளப்பட்டன. தகுதித் தேர்வை எழுத விரும்பாதவர்கள் லஞ்சம் கொடுத்து கல்லூரிகளில் அல்லது அரசு வேலைகளில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஒரு காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பேசப்பட்ட மிகப்பெரிய ஊழல் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details