தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'உத்தரப்பிரதேச கொலைகள் குறித்து கடும் நடவடிக்கை தேவை' - பிரியங்கா காந்தி! - உத்தர பிரதேசத்தில் நடந்த 100 கொலை சம்பவங்கள்

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நடந்த 100 கொலை சம்பவங்கள் குறித்து, அம்மாநில முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

By

Published : Apr 28, 2020, 5:42 PM IST

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது, 'ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாள்களில் உத்தரப்பிரதேசத்தில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று நாள்களுக்கு முன்பு, எட்டாவில் உள்ள பச்சோரி குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் சடலங்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

அதேபோல், புலந்த்ஷஹரில் உள்ள ஒரு கோயிலில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சாதுக்களை இரக்கமின்றி கொலை செய்துள்ளனர். இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை யாரும் அரசியல்படுத்தக்கூடாது.

உண்மையை வெளிக்கொணர்வது உத்தரப்பிரதேச அரசின் பொறுப்பு. விசாரணையை நடத்திய பின்னர் உண்மையை முழு மாநிலத்தின் முன்பு கொண்டுவர வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பு' என்றார்.

இதையும் படிங்க: 'தரமற்ற உபகரணங்கள் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - பிரியங்கா காந்தி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details