தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனிதாபிமானமற்ற முறையில் அடக்கப்படும் சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்கள் - பிரியங்கா சாடல் - CAA

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மனிதாபிமானமற்ற முறையில் அடக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினார்.

Priyanka Gandhi chides Yogi govt as parents of 14-month-old jailed for protesting against CAA
Priyanka Gandhi chides Yogi govt as parents of 14-month-old jailed for protesting against CAA

By

Published : Jan 2, 2020, 9:19 AM IST

உத்தரப் பிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை மனிதாபிமானமற்ற முறையில் அடக்குகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரப் பிரதேச பாஜக அரசு சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை அடக்க மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கிறது. 14 மாதக் குழந்தையின் பெற்றோர்கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

2019 குடியுரிமை திருத்தச் சட்டம் - வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்ட 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், ஜெய்ன், பார்சிகள், புத்தமதத்தினர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.
இந்தச் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details